Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அதிகரித்து வரும் சிங்கள குடியேற்றம், இராணுவ அச்சுறுத்தல் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவலை!

ஐ.நா.மனித உரிமை பிரதிநிதிகளிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துரையாடும்போது,  வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் நல்ல முறையில் வாழ்வத்ற்கான வாய்ப்புகளை குறைப்பதில் இலங்கை அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவமயமாக்கல் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளனர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் பல வழிகளில் பிந்தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இச்சந்திப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறியதாவது:

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் நல்ல முறையில் வாழ்வத்ற்கான வாய்ப்புகளை குறைப்பதில் இலங்கை அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவமயமாக்கல் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் நிலங்கள் திட்டமிட்ட வகையில் ஆக்ரமிக்கப்பட்டு வருகிறது. இதில் ராணுவமயமாக்கலும் உள்ளதால் தமிழர்களின் மீள்குடியேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வலிகாமம் மற்றும் திரிகோணமலை, சம்பூர், போன்ற பகுதிகளில் இன்னும் மீள் குடியேற்றம் நடைபெறவில்லை. இந்தியாவில் உள்ள 2 லட்சம் தமிழர்களும் வந்தால் இன்னும் நெருக்கடிகளே அதிகரிக்கும்.

இது போதாதென்று வடக்கு கிழக்குப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அனுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சிங்கள மக்களை முல்லைத் தீவில் அரசு குடியமர்த்தியுள்ளது. தமிழக மீனவர்களை அப்புறப்படுத்தி, சிங்கள மீனவர்களுக்கு முல்லைத்தீவு பகுதிகளில் மீன் பிடிக்க ராணுவம் வழி செய்து கொடுத்துள்ளது.

இவ்வாறான தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டின் காரணமாக தமிழ் மக்கள் மேலும் பின் தங்கிய நிலைக்கே கொண்டு செல்லப்படுகின்றனர்.

கட்டாயமாக இடம்பெற வேண்டிய அரசியல் தீர்வு விஷயத்தில் கூட இழுத்தடிப்பினை மேற்கொண்டதே தவிர கூட்டமைப்புடனான பேச்சு வார்த்தைகளிலும் அரசாங்கம் அர்த்தமுடன் செயல்படவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இன நல்லிணக்கமோ, அரசியல் தீர்வொன்றினையோ அரசாங்கத்திடமிருந்து தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறு கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post