Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தாயை தாக்கிய நபரை கொடூரமாக சுட்டுக்கொன்ற 12-வயது சிறுவன்!

தாயைக் காப்பாற்றிய துப்பாக்கி!
லக்னோ அருகே உள்ள போலகேடா, கிருஷ்ணா நகர் பகுதியில் ஒருவர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 12-வயது சிறுவன் ஒருவனின் தந்தை பால் கடை வைத்துள்ளார். கடைக்கு வந்த கிஷோர் திவாரி என்பவர் வியாபாரம் தொடர்பாக சிறுவனின் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்பு வாக்குவாதம் முற்றியதால், சிறுவனின் தாயையும், தந்தையையும்  கிஷோர் திவாரி தாக்கியுள்ளார். திவாரியிடமிருந்து தன் தாயைக் காப்பதற்காக தந்தையின் துப்பாக்கியை எடுத்து கிஷோர் திவாரியை சிறுவன் சரமாரியாக சுட்டதில், கிஷோர் திவாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் துறை சிறுவனை கைது செய்து விசாரித்து வருகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post