Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பி.வாசு இயக்கும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் அஜித் கதாநாயகன்!

பி.வாசு இயக்கத்தில் அஜித் நடித்த பரமசிவன்  பட வெளியீட்டின்போது.....
ரஜினியின் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுக்கும் தகுதி, கோலிவுட்டின் இளைய தலைமுறை ஹீரோக்களில் அஜித்துக்குத்தான் உண்டு என்பதை பில்லா படம் நிரூபணம் செய்தது.

தற்போது ரஜினியின் தில்லுமுல்லு பட கதாபாத்திரத்தை மிர்ச்சி சிவாவும், முரட்டுகாளை காளையன் கதாபாத்திரத்தை சுந்தர்.சியும் செய்தாலும் அஜித் அளவுக்கு கிரேஸ் கிடைக்கவில்லை!

ரஜினியின் பாப்புலரான பழைய கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது ஒருபுறம் இருக்க, சந்திரமுகியில் அவர் ஏற்று நடித்த ‘டாக்டர் சரவணன்’ கதாபாத்திரம் புத்தம் புதிய ஒன்று! அதை அஜித் ஏற்று நடிக்க இருக்கிறார் என்பதுதான் கோலிவுட்டில் சூடு பிடிக்கும் ஹாட் டாபிக்!

பி.வாசு மறுபடியும் ரஜினி அல்லது அஜீத்துடன் இணைந்து படம் பண்ண தயாராகிவிட்டார் என்கிறார்கள் நம்பகமான வட்டத்தில்!

பி.வாசு - ரஜினி இணைந்த சந்திரமுகி திரைப்படம் தமிழ் திரையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்தது. மணிச்சித்தரதாள் என்று தான் இயக்கிய மலையாள படத்தினை தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் இயக்கினார். ஆப்தமித்ரா என்ற கன்னட படத்தினைத் தொடர்ந்து ஆப்தரக்‌ஷா என்ற இரண்டாம் பாகத்தினையும் இயக்கினார். அந்தப்படமும் வெற்றிபெற்றது!

ஆனால் தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் இந்த இரண்டாம் பாகத்தினை இயக்கவில்லை. தற்போது இரண்டாம் பாகத்தினை தமிழில் இயக்க திட்டமிட்டு வருகிறார் வாசு. இதற்கான ஸ்ரிப்டும் ரெடியாம்!

முதல் பாகத்தினை போலவே இரண்டாம் பாகத்தில் ரஜினியை நடிக்க வைக்க  பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். அவர் மறுக்கும் பட்சத்தில் நான் நடிக்கிறேன் என சிவாஜி பிலிம்ஸ் உரிமையாளரான இளையதிலகம் பிரவுவிடம் சொல்லியிருகிறராம் அஜித்! காரணம் வேறொன்றுமில்லை! சந்திரமுகி படத்தினை தயாரித்த சிவாஜி பிலிம்ஸ், அசல் படத்தினைத் தயாரித்து கடும் பணச்சிக்கலில் இருந்து வருகிறது. அசல் படம் வெளியான போதே அஜீத் இன்னொரு படம் உங்களுக்கு செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆகவே, அஜீத் நடிக்க, பிரபு தயாரிக்க, வாசு இயக்க சந்திரமுகி-2 இன்று முதல் படப்பிடிப்பு என்று துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கிறார்கள் கோலிவுட்டில்!
[vuukle-powerbar-top]

Recent Post