Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரணாப் சென்னை வருகை: உற்சாக வரவேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
 
அவரை தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். சால்வையும் அணிவித்து கவுரவித்தனர்.

முப்படை தளபதிகள், அமைச்சர்கள், எம்.பிக்கள் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேராக கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

அங்கு நடைபெற்ற மதிய விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுத்தார். மாலை 4.15 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம் சென்று ஐகோர்ட்டு150-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
[vuukle-powerbar-top]

Recent Post