Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பீகாரில் கல்லூரி பேருந்து மீது இரயில் மோதல்: பத்து மாணவர்கள் துடிதுடித்து மரணம்!

பீகாரில், கல்லூரி பேருந்து  மீது, அதிவேக ரயில் மோதியதில்,பத்து மாணவர்கள், பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள், ரயிலுக்கு தீ வைத்தனர்.

ஹவுரா - கத்கோடம் பாக்  அதிவேக ரயில், பீகார் மாநிலம், சிவான் அருகே, நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. சாப் டலா என்ற இடத்தில் உள்ள ரயில்வே கிராசிங்கை, ரயில் கடந்தபோது, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து, ரயில் பாதையில் குறுக்கிட்டது. 

இதையடுத்து, பேருந்து மீது, ரயில் பலமாக மோதியது. இதில், கல்லூரி பேருந்து, பலத்த சேதமடைந்தது. அதில் இருந்த பத்து பேர், உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதில், இரண்டு பேர் மாணவியர். பேருந்தில் இருந்த, 30க்கும் மேற்பட்டோர், படுகாயமடைந்தனர்.

மோதிய வேகத்தில், ரயிலின் இன்ஜினும், சில பெட்டிகளும் தடம் புரண்டன. அங்கிருந்த கிராம மக்களும், மற்ற மாணவர்களும், கடும் ஆத்திரமடைந்து, ரயில் இன்ஜினுக்கு தீ வைத்தனர். தீயணைப்பு படையினர், விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இது குறித்து விசாரணை நடத்த, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பாஜ்பாய் உத்தரவிட்டுள்ளார்.

விபத்து குறித்து, கவலை தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர் சி.பி.ஜோஷி, உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு, தலா ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தோரின் குடும்பங்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாயும், உதவி தொகை அளிக்க, உத்தரவிட்டுள்ளார். 

ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா மற்றும் ரயில்வே உயரதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில், ரயில்வே கேட் திறந்திருந்ததா; கேட் கீப்பர் பணியிலிருந்தாரா? என்பது குறித்து, விசாரணை நடத்தி வருவதாக, ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post