Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு இரத்து செய்யப்படும்: நிதின் கட்கரி அறிவிப்பு!

அதிரடி அறிவிப்புகள் கை கொடுக்கும் என நம்புகிறார் நிதின் கட்கரி!
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் அரியானா மாநிலத்தில் உள்ள சூரஜ்குண்ட் நகரில் நடந்து வருகிறது. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, கூறியதாவது:- 

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மூழ்கும் கப்பலாக உள்ளது. காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடம் ஒருமித்து கருத்து இல்லை. எனவே பாராளுமன்றத்துக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். 

பாராளுமன்றத் தேர்தல் எப்போது நடப்பதாக இருந்தாலும் பாரதீய ஜனதா நிர்வாகிகளும், தொண்டர்களும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பா.ஜ.க.வினர் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும். காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடைவதில் பா.ஜ.க. தொண்டர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். 

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை பாரதீய ஜனதா கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இந்த விஷயத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனவே பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அன்னிய முதலீடு ரத்து செய்யப்படும். 

இவ்வாறு நிதின்கட்காரி பேசினார்.
[vuukle-powerbar-top]

Recent Post