Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

போராட்ட மக்களை ஆயுதங்களுடன் வந்து கண்காணித்த காவல்துறையினர்

நேற்று இடிந்தகரையில் தொடங்கிய பரபரப்பு பதட்டம் சிறிது ஒய்ந்திருக்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த மக்களை காவல்துறையினர் இடிந்தகரைக்கு வர மறுத்ததன் பின்னரே அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன் நேற்று இரவு காவல்துறையினர் எழு பேர் ஆயுதங்களுடன் இடிந்தகரையில் கடற்கரை ஓரமாக தங்கிருக்கும் போராட்ட மக்கள் இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும் அவர்களை மக்கள் கூச்சலிட்டு விரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையை பார்க்கும் போது அவர்கள் அந்த மக்களை நோட்டமிட வந்திருக்கலாம் என மக்கள் கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை காரணம் இடிந்தகரை மக்களுக்கு நியாயமான தீர்வு கிட்டும் வரை படகுகளை எடுக்கமாட்டோம் என்றும் ஒரு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இடிந்தகரை மக்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையினை மேற்கொள்ளுமாக இருந்தால் வன்முறை வெடிக்கும் என கன்னியாகுமாரி மீனவர்கள் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைக்கு இடிந்தகரையில் மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை தொடர்ந்தும் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

மேலும் உடனடி தகவலுக்கு அலை செய்திகளுடன் இணைந்திருங்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post