Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மத்திய அமைச்சரவையில் மாற்றம் – கூடுதல் பொறுப்பை ஏற்கிறார் ஜோஷி

டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானிய கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த திரிணாமுல் காங்கிரஸ், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திறும்ப பெற்றதால் அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் ரயில்வே அமைச்சருமான முகுல் ராய், தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் சி.எம். ஜாதுவா, நகர்ப்புற மேம்பாட்டு இணை அமைச்சர் சௌகதா ராய், ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சிசிர் அதிகாரி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் சுதீப் பண்டோபாத்யாயா, சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுல்தான் அகமது ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ள சி.பி.ஜோஷி, ரயில்வே துறையை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்புக்கு பிறகு தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post