Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டீசல் விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தேசியக் கட்சித் தலைவர்களும், பிராந்திய கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் : 

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து பல முறை பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி வருகிறது. 

விலைவாசியை குறைப்போம் என கூறி விட்டு அடுத்த இரண்டு நாட்களிலேயே டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5 அதிகரித்திருப்பது மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையின் விளைவே என கூற வேண்டும். 

பட்ஜட் போட்டு வாழ்க்கையை நடத்தி வரும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை இந்த விலை உயர்வு பெருமளவில் பாதிக்கும். மேலும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே என கட்டுப்பாடு விதித்துள்ளது மத்திய அரசு. 

எந்த ஒரு குடும்பமும் 6 சிலிண்டர்களுக்குள் தங்கள் சமையல் எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது. எனவே டீசல் விலை உயர்வையும், சிலிண்டர் கட்டுப்பாட்டையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post