Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

இலங்கை அதிபர் ராஜபக்சே மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி வருகைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ராஜபக்சேவை மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வர அனுமதிக்க வேண்டாம் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

மக்களவையில் இன்று திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் இந்த பிரச்னையை எழுப்பினர். நிலக்கரி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமளி நிலவிய நிலையில், போர்க்குற்றம் புரி்ந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று இக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.

இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கவும் இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜபக்சே இந்தியாவுக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று தமிழகத்தில் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post