Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரியில் தண்ணீர் திறக்க கன்னட அமைப்புகள் எதிர்ப்பு

காவிரியில் தண்ணீர் திறக்க பிரதமர் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் கர்நாடக – தமிழக எல்லையில் ஓசூர் அருகே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கன்னட ரக்ஷ்ன வேதிக்கா, கர்நாடகா ஜாக்குருதி வேதிக்கா அமைப்புகள் தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உருவ பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதன் காரணமாக இரு மாநில எல்லையிலும் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன. இந்த சம்பவத்தையடுத்து கர்நாடக – தமிழக எல்லையில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post