Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உதயக்குமார் சரணடைய வேண்டாம்-கெஜ்ரிவால் வேண்டுகோள்


அணு உலைக்கு எதிராக போராடும் உதயக்குமார் காவல்துறையிடம் சரணடைய வேண்டாமென்று கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அணு உலைக்கு எதிராக போராடிவரும் மக்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியின் விளைவாக உதயக்குமார் மற்றும் அவரின் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் காவல்துறையுடம் சரணடைவதாக அறிவித்தனர்.மேலும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் முன்னிலையில் சரணடைவதாக உதயக்குமார் அறிவித்திரிந்தார்.ஆனால் இடிந்த கரையில் இருந்த சில இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு உதயக்குமாரை குண்டுகட்டாக தூக்கி படகில் ஏற்றி வேறு இடத்திற்கு சென்றுவிட்டனர்.



இந்த நிலையில் கெஜ்ரிவால் நேற்று இரவு இடிந்தகரையை வந்தடைந்தார்.பின்னர் போராட்டக் குழுவினருடன் பேசிய அவர் நிலைமையை அறிந்துகொண்டு மக்களிடம் உரையாற்றினார்.இதனையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவிக்கையில் உதயக்குமார் சரணடைய வேண்டாமென்றும் அவர் சரணடைவதற்கான காரணங்களை காவல்துறை தெரிவிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில் அணு உலையை இப்போது திறக்க வேண்டிய அவசியமில்லை எனவும் மக்களின் மன நிலையை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கூறினார்.



இந்த நிலையில் உதயக்குமார் தற்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை.மேலும் மக்களின் உண்ணாவிரதம் தொடருமென்று போராட்டக் குழு அறிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post