Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் துப்பாக்கி சூட்டை கண்டித்து மும்பையில் ஆர்ப்பாட்டம். பினாயக் சென் கலந்துக் கொண்டார்


கூடங்குளம் துப்பாக்கி சூட்டை கண்டித்து மும்பையில் ஆர்ப்பாட்டம்.மருத்துவர் பினாயக் சென்னும் கலந்துக் கொண்டார். கூடங்குளம் துப்பாக்கி சூட்டை கண்டித்தும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் தாதர் ரயில் நிலையம் முன்பு (12/09/2012 ) மாலை 5 .30 மணிக்கு நடைப்பெற்றது.. 

இதில் தமிழ் அமைப்புகள் விழித்தெழு இளைஞர் இயக்கம், விடிவெள்ளி இயக்கம், நாம் தமிழர் கட்சி, தமிழர் நலம் பேரியக்கம் ரே ரோடு - ஆதி திராவிட மகாசன சபை மற்றும் அமைப்பு சார மனித ஆர்வலர்கள், பெண்கள்  என பலர் கலந்துக்கொண்டனர். நேற்று (12 /9 /12 ) மாலை மும்பை தாதர் ரயில் நிலையம் முன்பு நடந்த கூடங்குளம் துப்பாக்கி சூட்டை கண்டித்தும் மற்றும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரபல மருத்துவர் பினாயக் சென்னும் கலந்துக்கொண்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.






[vuukle-powerbar-top]

Recent Post