Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காலவதியான கண்ணீர் புகை குண்டுகள் எங்கள் மீது வீசப்பட்டன ~ உதயகுமார் அதிரடி பேட்டி

கூடங்குள அணுமின் நிலைய எதிர்பாளர்கள் குழு ஒருங்கிணபை்பாளர் சுப.உதயகுமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்., கூட்ஙகுள அணுஉலைக்கு எதிரான தங்களது அறவழி போராட்டத்திற்கு தேசிய அளவில் பலர் ஆதரவு அளித்து வருகின்றனர். 

தேசவிரோத செயலில் ஈடுபடாத காரணத்தால் கைதாகத் தேவையில்லை என தானும் தனது சக போராட்டக்கார்களும் நம்புவதாக கூறினார்.

காலவதியான கண்ணீர் புகை குண்டுகள் : 

கடந்த 10ம் தேதியன்று இடிந்தகரையில் போலீஸார் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் போது போராட்டக்கார்களான எங்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அதன் பின்னர் எங்களில் பலருக்கு சருமத்தில் அரிப்பு போன்ற தாக்கம் ஏற்பட்டது. 

பின்னர் தான் எங்கள் மீது வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகள் காலாவதியானவை என்பது தெரிய வந்தது. இதில் கூட ஊழல் நடைபெறுகிறது. இதையெல்லாம் அரசு கண்டு கொள்ளவில்லை.

மாறாக இடிந்தகரையில் அறவழியில் போராடும் எங்கள் மக்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களைப் போல் பாவித்து 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

தமிழகத்தில் அப்பாவி மீனவர்கள் பலர் பலியான போது இவ்வளவு ரோந்தும், பாதுகாப்பும் போடப்படவில்லையே? எங்களை இப்படி கண்காணிப்பதை வண்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் எங்களது போராட்டம் உணர்வுப் பூர்வமானது, நாங்கள் எந்த ஒரு வெளிநாட்டில் இருந்தோ இல்லை இந்தியாவில் இருந்து செயல்படும் எந்த ஒரு தொண்டு நிறுவனத்திடம் இருந்தோ இதுவரை ஒரு ரூபாய் கூட நண்கொடையாக வாங்கியதில்லை, இனியும் வாங்கப் போவதில்லை.

இந்த ஆதாரமற்ற குற்றச்சாடை்டை எங்கள் மீது சுமத்தி வரும் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியோ இல்லை வேறு யாருமோ எங்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்றார்.
[vuukle-powerbar-top]

Recent Post