Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரையில் மிகவும் தாழ்வாக பறந்த இந்திய விமானம் ஒருவரை பலி வாங்கியது




கூடங்குளத்தில் இன்று காலை முதலே கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினார்கள் இடிந்தகரை மக்கள். அவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவின் கடலோர காவல்படை விமானம் மிக தாழ்வாக பறந்து கொண்டு கண்காணிப்பில் இருந்தது. விமானம் மிக தாழ்வாக பறந்ததில் தூண்டில் வளைவு பாலத்தில் நின்று கொண்டிருந்த சகாயம் என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

மக்கள் பலரும் இப்போராத்தில் கலந்து கொண்ட போது சிலர் தூண்டில் பாலத்தில் நின்ற படி இப்போராட்டத்தை பார்த்தனர். அப்போது பல முறை இந்திய விமானம் மிகத் தாழ்வாக பறந்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தி குழந்தைகைகளை பயமுறுத்தியது. விமானம் மிகமிக தாழ்வாக பறக்கும் போது பாலத்தில் இருந்து கைக்கு எட்டும் தூரத்தில் விமானம் இருந்ததாக  மக்கள் தெரிவித்தனர். 

அந்த சமயத்தில் தான் பாலத்தில் இருந்து சகாயம் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்தவர் காயங்களுடன் ஜெயசெகரன் மருத்துவமனையில் சேர்க்கப் பாட்டர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகாயத்திற்கு திருமணம் ஆகி குழந்தைகளும் உண்டு. 

இந்த செய்தியை கேட்ட தமிழர்கள் மிகவும் கொதித்து போயுள்ளனர். காரணம், இதுவரை 550 க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் சிங்களக் கப்பல் படையால் கொல்லபட்ட போது பாதுகாப்புக்கு வராத இந்திய கடலோர காவல் படை , இப்போது தங்கள் வாழ்வாதாரத்திற்கு போராட்டும் மக்களை குறிவைத்து வானில் பல நூறுமுறை பறந்து செல்கிறது. எவ்வளவு முறையிட்டும் இந்திய அரசு மக்களை காக்க இது போல விமானம் மூலம் கண்காணிக்க வில்லை . இன்று மட்டும் ஏன் இந்த விமானம் பலமுறை சுற்றிச் சுற்றி வட்ட மிட்டது என்ற கேள்வியை எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post