Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய படத்துக்காக அமெரிக்க அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் ~ வைகோ

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய படத்துக்காக அமெரிக்க அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்! மனித குலம் போன்றுகின்ற அண்ணலாம் பெருமானார் நபிகள் நாயகம் அவர்களை, மிகமிக மோசமாக இழிவுபடுத்தி திரைப்படம் தயாரித்த நக்கோலா பசிலி நக்கோலா என்பவன் அமெரிக்காவில் வசிக்கிறான். 

குற்றங்கள் செய்ததற்காக சிறையில் இருந்து பரோலில் வந்து இருக்கிறான். தீயிட்டுக் கொளுத்தப்படவேண்டிய இந்தத் திரைப்படத்தைத் தயாரித்த குழுவினுடைய பெயர்தான், மனதை வாள்கொண்டு பிளக்கிறது. காரணம், அன்பு, கருணை, சகிப்புத் தன்மை, நீதியை உலகத்துக்கு உபதேசித்து, கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரின் பெயரைச் சூட்டிக்கொண்ட, ‘கிறிஸ்துவுக்கான ஊடகம்’ என்று பெயர் சூட்டிக்கொண்ட கொடுமை ஆகும். 

பாலியல் உறவுகளைப் பச்சையாகச் சித்தரிக்கும் நீலப்படங்களை இயக்குகின்ற ஆலன் ராபர்ட் என்கின்ற அயோக்கியன்தான், ‘அப்பாவி இஸ்லாமியர்கள்’ என்ற இப்படத்தை இயக்கி உள்ளான். கோடானுகோடி இஸ்லாமியர்களின் உள்ளத்தை மட்டும் மல்ல, அண்ணலார் நபிகள் நாயகத்தைப் போற்றுகின்ற, உலகெங்கும் வாழும் அனைத்து மக்களின் நெஞ்சிலும் நெருப்பைக் கொடடிவிட்டது. 

இப்பொழுது இணையத்தில் டிரெய்லராக ஓடிக்கொண்டு இருக்கின்ற இப்படம். இந்த நிக்கோலா என்பவன் பூர்வீகத்தில் எகிப்தைச் சேர்ந்தவன். இஸ்லாம் மார்க்கம் ஏற்படுவதற்கு, அங்கிருந்த மத நம்பிக்கையைச் சேர்ந்த கூட்டத்தின் வழி வந்தவன். இப்போது அமெரிக்காவில் வசிக்கிறான். 

ஆனால், ‘இந்தப் படம் அரசின் வெளியீடு அல்ல’ என்றும், ‘தனி மனித சுதந்திரத்தில் தலையிட முடியாது’ என்றும், அமெரிக்க அரசாங்கம் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் அக்கிரமம் ஆகும். அமெரிக்க அரசு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்; 

இப்படத்தைத் தயாரித்த கூட்டத்தைக் கைது செய்து சிறையில் அடைத்துத் தண்டிக்க வேண்டும். உலகம் எங்கும் உள்ள கிறிஸ்துவ அமைப்புகள், ஏசுநாதரின் நெறியைக் காப்பதற்காகவாவது இப்படத்தைத் தயாரித்தவர்களைக் கடுமையாக நிந்திக்க வேண்டும். 

உலகம் எல்லாம் உள்ள இசுலாமிய மக்களின் இருதயங்களில் சூட்டுக்கோலைத் திணித்து உள்ள இப்படத்தைத் தயாரித்த கயவர்கள், மனித குலத்தில் வாழவே தகுதி அற்றவர்கள். 

இப்போதாவது, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கழுகுப் புத்தியை மாற்றிக்கொண்டு, இப்போது வந்துள்ள பிரளயத்தைக் கண்டாவது அறிவும் உணர்வும் பெற்று, உடனே அமெரிக்க அரசு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்; இப்படத்தைத் தடை செய்ய வேண்டும். இல்லையேல், இனியும் ஏற்படக்கூடிய விபரீதங்களுக்கு அமெரிக்க அரசே பொறுப்பாளியாக நேரும் என எச்சரிக்கிறேன். 

‘தாயகம்’ 
வைகோ 
சென்னை - 8 
பொதுச் செயலாளர், 
16.09.2012 
மறுமலர்ச்சி தி.மு.க
[vuukle-powerbar-top]

Recent Post