Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கொலைகாரன் ராஜபக்சேவை வரவேற்க தயாராகும் பாஜக, காங்கிரசை கண்டித்து ஆர்பாட்டம் அறிவிப்புதமிழர் முன்னேற்ற கழகத்தின் செய்திக் குறிப்பு .

நம் தொன்மையான தமிழினத்தை இந்தியத்தை காப்பதற்கு வேறு வழியே இல்லை என்பதாக எண்ணி விவேவகம்ற முடிவெடுத்து பரம எதிரியை அழிப்பதுபோல் அளிக்க துணை நின்றது காங்கிரஸ் கட்சி என்பதை நாம் அறிவோம் இந்நிலையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் பா ஜ க அங்கம் வகித்து குரல்கொடுத்தாலும் . அதன் செயலபாடுகளும் தமிழர்களுக்கு பல்வேறு ஐயங்களை எழுப்பி கொண்டே வருகிறது.

ஆம் . ராமர் கோவில் கட்ட இந்தியா முழுக்க கர சேவை நடத்திய ப ஜ க ,ராமர் பாலம் காக்க எழுச்சி கொள்ளும் பா ஜ க, கொல்லப்படும் தமிழர்களில் பெரும்பாலோர் இந்துக்கள் என்பதர்க்காகவாவது , வலுவாக கிளர்ந்து எழுந்து இந்தியா முழுக்க திரண்டு போராடி பிரச்சனையை தீர்க்க உதவாது, அக்கட்சியின் தமிழக தலைவர்கள் மட்டும் நாங்களூம் உங்கள் பக்கம்தான் என குரல் கொடுத்ததை நாம் அறிவோம் போர் முடிந்து மூன்றாண்டு கடந்தும் தமிழர்கள் முள் வேலியில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படும் நிலையில் அதை கேட்டும் காதில்போடாது,கண்டும் காணாத பா ஜ க , அங்குள்ள கோவில்கள் சிங்களரால் இடிக்கப்ப்டுவது கண்டாவது தன் எதிர்ப்பை வலுவாக்கி இடிப்பவனை எதிரியாக கருதி தடுத்து நிறுத்தியதா ? 

 மாறாக இடிப்பவனுக்கே ,அவன் மதம் சார்ந்த நிகழ்வுக்கு இங்கு வர சிவப்பு கம்பளம் விரிப்பது வினோதமானது மட்டுமல்ல ,ஒட்டுமொத்த தமிழர்களையும் அவர்களின் உண்ர்வுகளையும் கொச்சைப்படுத்துவதோடு கேலிகூத்தாக்குவதாகும். ராஜபட்சே வரவு இந்திய இலங்கை உறவை பலப்படுத்துமென கூறுகிறார் சுஷ்மா சுவராஜ் , ராஜபட்சே இந்தியா வருவதை தமிழர்கள் எதிர்க்கவில்லையென முரளி மனோகர் ஜோசி சொல்கிறார் இந்தியம் காக்க தமிழர்களை தொடர்ந்து பலிகடா ஆக்குவது வெட்க கேடானது . தமிழக மீனவனை பலிகொடுப்பதை தடுக்க தவறி , தமிழர்களுக்கு எதிராக கூடங்குள அணுஉலைக்கும் பா ஜ க துணை நின்று , கொன்று ஒழித்தவருடனே கூடி வாழுங்கள் தனி நாடு தேவை இல்லை என்று கூறி நாளை கிடைக்க இருக்கும் தமிழீத்திற்க்கும் முட்டுக்கட்டையிடும் பா ஜ க தனி நாடுதான் தீர்வு என அறிவிப்பதில் தனக்கு உள்ள சிக்கலை வெளிப்படையாக தெரிவிக்க தயாரா ? தமிழர்களில் பலர் இந்துக்கள் என்பதற்காகவோ, ,கொல்லப்பட்டவர்கள் மனிதர்கள் என்பதற்காகவோ ,உங்களின் தமிழக ஓட்டு அரசியலுக்காகவோ அப்படி அறிவிக்க தயாரா? 

 பா ஜக எதிர்த்தாலும் எவர் எதிர்த்தாலும் தமிழீழம் தனி நாடாவதை எதிர்ப்பவர்கள் இனி தமிழினத்திற்கு நட்பாக இருக்க முடியாதென்பதை நாம் உணர்த்துவோம் கொலைகாரன் ராஜபட்சே இந்தியாவிற்குள்  அனுமதிப்பதை உடனே தடுக்க கோரி போராடுவோம் வாரீர் அணி திரண்டு வாரீர் தொடர்புக்கு 99625 11984 ,94448 05770,  


[vuukle-powerbar-top]

Recent Post