Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கடலுக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள்

கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் சென்றனர்.

அவர்கள் 18 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீன்பிடிப்பதற்காக இன்று அதிகாலையில் கடலுக்குச் சென்றனர்.

கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதைக் கண்டித்தும், அதனை மூட வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்ட அனைத்து மீனவர் கூட்டமைப்பு சார்பில் கடந்த 10 ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்களும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்களின் மீன்பிடித் தொழில் முடங்கியது. இந்த நிலையில், மீனவக் கூட்டமைப்பினர் நேற்று ஆலோசனை நடத்தினர். அதில் இன்று முதல் கடலுக்குச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post