Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சேவை வெளியேற்ற சென்னை சென்ட்ரலில் நாளை தொடருந்து மறியல் - வேல்முருகன்



ராஜபக்சேவை வெளியேற்ற வலியுறுத்தி சென்னை சென்ட்ரலில் நாளை ரயில் மறியல் போராட்டம்.

கொடுங்கோலன் ராஜபக்சேவின் இந்திய வருகைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று மாபெரும் ரயில் மறியல் அறப்போராட்டம் நடத்தினர்! கடலூரில் மட்டும் 10 ஆயிரத்துக்கும அதிகமானோர் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் சிங்கள கொலைவெறியன் போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் போர்க்குரல் எழுப்பி வருகிறது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் ரயில் மறியல் அறப்போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் மத்திய பிரதேசத்தின் ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கமும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும் தமிழர்தம் உணர்வுகளைப் புறந்தள்ளிட்டு கொலைவெறியன் ராஜபக்சேவுக்கு செங்கம்பள வரவேற்புக் கொடுத்திருக்கிறது. 

 மத்திய அரசு மற்றும் மத்திய பிரதேசம் பாஜகஅரசு ஆகியவற்றின் தமிழின விரோதப் போக்கைக் கண்டித்து சென்னை சென்ட்ரல் தொடருந்து  நிலையத்தில் நாளை (21.09.12) காலை 11 மணியளவில் வட இந்தியாவுக்கு செல்லும் அனைத்து தொடருந்துகளையும்  மறிக்கும் போராட்டத்தை எனது தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்த உள்ளனர். இவ்வாறு பண்ருட்டி வேல்முருகன் அவரது அறிக்கையில் தெரிவித்தார்.


[vuukle-powerbar-top]

Recent Post