Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காலதாமதமாக வெளியாகும் நடுவுல கொஞ்சம் பக்கத காணோம் திரைப்படம்.


இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில்  உருவாகியுள்ள நகைச்சுவை படமான, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இந்த வார இறுதியில் திரைக்கு வர தயாராகியிருந்தது.இருந்த போதிலும் இப்படத்தை திரையிடுவதை  வரும் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர் இப்படகுழுவினர்.

 பெரிய பொருட்செலவில் தயாராகும் படங்கள் மற்றும் தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்கள் நடித்த படங்கள்  வெளியாகும் திரையரங்குகள் அனைத்திலும்  தற்போது,புதிய படங்களை திரையிடக் கூடிய அரங்குகள் இல்லாத  காரணத்தினாலும்,சாட்டை மற்றும் சாருலதா போன்ற படங்கள் திரைக்கு வர இருப்பதாலும்,இப்படத்தை வெளியிடும் தேதியை அக்டோபர் மாதத்திற்கு மாற்றியுள்ளனர் இப்படக்குழுவினர்.

அண்மையில் இப்படத்தின் பிரத்தியேக காட்சி ஒன்றை தமிழ் சினிமாவின் முக்கிய நபர்களுக்கு காட்சிப்படுத்தியபோது அவர்களிடம் இருந்து பல அனுகூலமான கருத்துக்கள் கிடைத்ததாகவும், அத்துடன் நிச்சயம் இப்படமானது தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பெறும்  எனவும் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர் இப்படக்குழுவினர்.

நடுவுல கொஞ்சம் பக்கத காணோம் படத்தில் நாயகனாக,விஜய் சேதுபதி மற்றும் நாயகியாக காயத்திரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post