Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

கூடங்குளம் அணுஉலை போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் இருக்கும் ஏராளமான விசை படகுகள் கடலுக்கு செல்லவில்லை. நாளை செல்ல இருக்கும் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் 500 க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடலுக்கு செல்லவில்லை என எங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மேலும் கரைகளில் நிற்கும் படகுகளில் கருப்பு கொடியினை ஏந்தி தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. 

தங்கச்சி மடம், பாம்பன் மீனவ பிரதிநிதிகளின் கூட்டம் இராமேஸ்வரதில் இன்று காலையில் இருந்து நடைபெற்று வருகின்றது. இதில் எத்தனை நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்வது என முடிவு செய்யவுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post