Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூகுள் மேப்பில் பவளப் பாறைகளை மிக துல்லியமாக பார்க்கும் வசதி

முக்கியச் சாலைகள், தெருக்கள், சுற்றுலாத் தலங்கள், வீடுகள் என உலகின் அனைத்துப் பகுதிகளையும் துல்லியமாகக் காட்டக்கூடிய கூகுள் மேப்பில் இப்போது, பவளப் பாறைகள் இருக்கும் இடங்கள் படங்களுடன் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

பனோரமா (Panorama) எனப்படும் 360 டிகிரி சுழற்சியில் பார்க்கக்கூடிய இந்தத் துல்லியமான படங்கள், கூகுள் ஸ்ட்ரீட் வியூவ் வசதியுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் ஹெரோன் தீவு, லேடி வில்சன் தீவு போன்ற பகுதிகளை ஒட்டிய கடலில் உள்ள பவளப் பாறைகளை கூகுள் மேப்பில் இப்போது பார்க்கலாம். 24 மெகா பிக்சல் துல்லியத் தன்மை கொண்ட இந்தப் படங்கள், கடலில் மூழ்கிப் பயணம் செய்யும் அனுபவத்தைக் கொடுக்கக்கூடியவை. 

பவளப் பாறைகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்போது இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. மேப் சேவையில் கடலுக்கு அடியில் உள்ள பகுதிகளையும் காட்டுவது இதுவே முதல் முறையாகும். 

பல்வேறு போட்டிகளைச் சந்தித்துவரும் நிலையில், சந்தையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியாக இந்த வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post