Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை தமிழகத்தில் அனுமதிக்கப் போவதில்லை ~ ஜெ அறிவிப்பு

சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை தமிழகத்தில் அனுமதிக்கப் போவதில்லை என முதலமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டடை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

டீசல் விலை உயர்ந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியை மத்திய அரசு ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார். 

மத்திய அரசின் முடிவால் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். 

பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதே மத்திய அரசி்ன் வாடிக்கை என விமர்சித்துள்ளார். 

தமிழக அரசு சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்காது என்றும், மத்திய அரசு உடனடியாக தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post