Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மற்றொரு சீன உயர்மட்டத் தலைவர் இலங்கையில்


சீனாவின் தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியல் குழுத் தலைவர் வூ பங்குவோ நான்கு நாள் பயணமாக நேற்று
இலங்கை வந்துள்ளார்.

இவர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட இலங்கையின் உயர்மட்ட அரச தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

அத்துடன் சீனாவும் இலங்கை இணைந்து மேற்கொள்ளும் பல்வேறு அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத் திட்டங்களையும் இவர் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி தலைமையிலான உயர்மட்ட படை அதிகாரிகள் குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இரண்டு வாரங்களில், சீனாவின் உயர்மட்ட அரசியல் தலைவர் ஒருவர் இலங்கை வந்துள்ளார்.

இவருடன் 95 பேரைக் கொண்ட பெரியதொரு சீன அதிகாரிகள் குழுவும் இலங்கை வந்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post