Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இனியொரு ஆயுத போராட்டம் இலங்கை தீவில் தொடங்க நான் அனுமதிக்க மாட்டேன்

கடற்படையின் செயற்பாடுகள் மூலம் இலங்கையில் இனி ஒரு ஆயுத போராட்டமோ அல்லது ஆயுத குழுவோ செயற்படுவதையோ அல்லது உருவாகுவதையோ என்னால் அனுமதிக்க முடியாது என்று கடற்படை தளபது உறுதி வழங்கியுள்ளார் .

ஆயுதக் குழுக்கள் மீளவும் தலைதூக்க இடமளிக்க மாட்டேன் என புதிய கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
தீவு நாடான இலங்கையின் கடல் எல்லைகளை சிறந்த முறையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
போரில் வெற்றியடைந்த காரணத்தினால் கடற்படையினர் அனுபவமிக்க வெற்றிகரமான கடற்படையாக மாறியுள்ளனர்.
போர் பயிற்சி மற்றும் வழிகாட்டல்களின் மூலம் இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கைக் கடற்படைக்கு தலைமை தாங்கக் கிட்டியமை மகிழ்ச்சி அளிக்கின்றது.
சட்டவிரோத ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கடல் வழி சட்ட விரோத நடவடிக்கைகளும் தடுக்கப்படும்.
கடற்படை வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
புதிய கடற்படைத் தளபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நேற்று செய்தியாளா சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post