Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய இராணுவ இரகசியங்களுடன் பாக்கிஸ்தான் தப்ப முயன்ற தீவிரவாதி கைது


இந்திய இராணுவ இரகசியங்களுடன் பாக்கிஸ்தானுக்கு தப்ப முயன்ற தீவிரவாதியை கைது செய்தது காவல்துறை.

திருச்சியை சேர்ந்த தமிம் அன்சாரி என்ற இளைஞர் இந்திய இராணுவ இரகசியங்களுடன் பாக்கிஸ்த்தான் செல்ல முயன்ற போது திருச்சி விமான நிலையம் அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட தமிம் அன்சாரியிடமிருந்து இந்திய இராணுவ தளங்களின் வரைபடங்கள்,குறுந்தகடுகள்,புகைப்படங்கள்,சிம் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கைது செய்யப்பட்ட அன்சாரி எம்.ஏ பட்டதாரி எனவும் திருச்சியில் இருந்து இலங்கை வழியாக பாக்கிஸ்தான் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது.இவருக்கு ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரி தகவல்கள் கிடைக்க உதவியதாகவும் தெரிவிக்க்ப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அன்சாரியின் மீது இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் படி வழக்குத் தொடரப்பட்டு காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.இந்த விசாரணையின் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது
[vuukle-powerbar-top]

Recent Post