Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு


கூடன்குளம் அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.இதற்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அணு உலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதன் விளைவாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர் பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.

பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த மனுவைப் பற்றி சுந்தர்ராஜனிடம் கேட்டபோது இந்த மனுவில் அணு உலை ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தபடி 17 பாதுகாப்பு அம்சங்களில் 6 பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவ்ம் மற்ற பாதுகாப்பு அம்சங்கள் பற்றி கேள்வி எழுப்பியுள்ளதாகவும் மேலும் இன்னொரு மனு ஒன்றை தாக்கல் செய்யப்போகதாகவும் தெரிவித்தார்.

மேலும்,இன்னும் சில அணு உலைக்கு எதிரான இயக்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்போவதாக தகவலகள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post