Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிழக்கில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு


கிழக்கு மாகாணசபையில் ஆட்சிமைக்க தமக்கு அழைப்பு விடுக்கக் கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண ஆளுனர் வைஸ் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரமவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட எதிரணியினருக்கே கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன.

எதிரணிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

இலங்கை அரசுக்கு கிழக்கில் ஆட்சியமைப்பதற்கான போதிய வல்லமை இல்லை என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 11 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன், 4 ஆசனங்களைக் கொண்ட ஐதேகவின் ஆதரவைப் பெற்றுள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண ஆளுனருக்கு தொலைநகல் மூலம் நேற்றுமாலை கடிதம் அனுப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஆளுனரை நேரில் சந்தித்து இது தொடர்பான கோரிக்கையை விடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஐதேக ஏற்கனவே ஆதரவு வழங்கியுள்ளது.

இதன்மூலம் தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியன தலா 15 ஆசனங்களுடன் சமநிலையில் உள்ளன.

இந்திநலையில் 7 ஆசனங்களைக் கொண்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசே தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

யாருக்கு ஆதரவு என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post