Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரையில் மீறப்படும் மனிதவுரிமை ~ மக்கள் பால் மற்றும் உணவு இன்றி தவிப்பு

இடிந்தகரை பகுதியில் தொடர்ந்தும் மேலும் மேலும் பிரச்சனைகளை அங்கு இருக்கும் மக்கள் எதிர்நோக்கி வருவதாக களத்தில் இருக்கும் எம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்று காலையில் இருந்து அங்கு இருக்கும் மக்களுக்கு பால், உணவுகள், தண்ணீர் மற்றும் காஸ் போன்றவற்றை காவல்துறையினர் தடைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது ஒரு கிராமத்தினையே சிறை பிடித்திருப்பது இந்தியா வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். அத்துடன் மிகவும் அநியாயமான மனிதவுரிமை அத்துமீறலாக இருக்கிறது.

அங்கு இருக்கக்கூடிய மக்கள் தற்போது தங்களுக்கு தேவையான பொருட்களை அயல் ஊர்களில் இருந்து கடல் மார்க்கமாக இடிந்தகரைக்கு கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரியவர்கள் உணவு இல்லாமல் இருந்துவிடலாம் ஆனால் சிறிய பச்சிளம் குழந்தைகள் எவ்வாறு இருக்கும் அதை நினைத்துப்பார்க்கதது ஒரு வகையில் மனவேதனையாகதான் இருக்கிறது என எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இதற்கு தகுந்த நடவடிக்கையினை தமிழக அரசு எடுக்க வேண்டும் என அங்கிருக்கும் மக்கள் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கபடுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post