Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது


கூடன்குளத்தில் உள்ள அணு உலை செயல்பாட்டை எதிர்ப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது காவல்துறை.

இதன் விளைவாக சென்னையில் அணு உலை எதிர்ப்பாளர்கள் இருவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்துள்ளது.சென்னையில் சதிஷ்குமார் மற்றும் திமுக ஒன்றியச் செயலாளர் முரளிதரன் ஆகியோரை அண்ணா நூலகத்தில் வைத்து காவல்துறை கைதுசெய்துள்ளது.சதிஷ்குமார் என்பவர் திருநெல்வேலியில் நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அணு உலை எதிர்ப்பாளர்களை கைது செய்யும் முனைப்புடன் காவல்துறை செயல்படுகிறது.இதனிடயில் அணு உலை எதிர்ப்பாளர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post