Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சீனாவின் திருட்டுக்குத் துணைபோன இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்



திருட்டுத்தனமாக மிதிவண்டிகளை அனுப்புவதற்கு சீனாவுக்கு உதவியதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனத்
தயாரிப்பு மிதிவண்டிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 48.5 வீத தீர்வை மற்றும் வரிகளை விதித்து வருகிறது.

இந்த
வரிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்காக சீனா, இலங்கையினை பயன்படுத்தி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில்
இருந்து மிதிவண்டிகளை ஏற்றுமதி செய்வது போன்று காட்டி சீனா திருட்டுத்தனமாக தமது மிதிவண்டிகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அனுப்பி வந்தது.
இலங்கையின்
துணையுடன் இடம்பெற்றுள்ள இந்த மோசடியை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்துள்ளதை அடுத்தே, இலங்கை  அரசுக்கு முறைப்படி கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசெல்சில்
உள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் தூதுவரிடம், ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக பணிப்பாளர் இந்தக் கண்டனத்தை கையளித்துள்ளார்.

எனினும்
இதற்கு இலங்கை அரசிடம் இருந்து இன்னமும் எந்தப் பதிலும் வரவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பேனாட் சவேஜ் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post