Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட போவதில்லை" ~ அன்னா ஹசாரே

கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அதேசமயம் மாற்று திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றத்தை கொண்டு வரும் முயற்சியாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாகவும், இரண்டு மாதங்கள் கழித்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஹசாரே, தேர்தலில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாக இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த மாதம் உண்ணாவிரதம் இருந்த போது, கட்சி ஆரம்பிக்க போவதாக அன்னா ஹசாரே குழுவினர் அறிவித்தனர். இதனையடுத்து சில நாட்கள் கழித்து லோக்பாலுக்காக உருவாக்கப்பட்ட அன்னா குழு கலைக்கப்பட்டதாக ஹசாரே அறிவித்தார். கட்சி ஆரம்பிக்கும் நோக்கத்துடன் குழு கலைக்கப்பட்டதாக அப்போது பரவலாக பேசப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post