Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி மீனவர்கள் முற்றுகை பேரணி

கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி முற்றுகை பேரணியைத் தொடங்கியுள்ளனர். 

நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடல் வழியாக இந்த பேரணியைத் தொடங்கியுள்ளனர். மீனவர்களின் முற்றுகைப் போராட்டத்தையடுத்து கடலோர காவல்படை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் மத்திய பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கடலோர காவல்படை விமானமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முற்றுகைப் பேரணியில் கன்னியாகுமரி மீனவர்களும் பங்கேற்றுள்ளனர். 

இதனிடையே கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியுள்ளதாக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.இந்த தகவலை அதன் தலைவர் பஜாஜ் உறுதிபடுத்தியுள்ளார். 

எரிபொருள் நிரப்புவதற்கான ஒப்புதல், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முறைப்படி வழங்கப்பட்டதாகவும், இதையடுத்து புதன்கிழமை முதல் அப்பணி நடைபெற்று வருவதாகவும் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post