Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விடுதலைப் புலிகளை தோற்கடி‌க்க பா‌கி‌ஸ்தானே காரண‌ம் - ராஜபக்ச


கொழும்பு நகரில் நடைபெறும் காமன்வெல்த் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தானில் இருந்து 22 எம்.பி.க்கள் இலங்கை வந்துள்ளனர்.

அதிபர் மாளிகையில் பாகிஸ்தான் எம்.பி.க்களை சந்தித்து பேசிய ராஜபக்ச, பாகிஸ்தான் இலங்கையின் உண்மையான நட்பு நாடு என்றும், அந்நாட்டு மக்கள் மீது தமக்கு எப்போதும் ஆழமான அன்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் தெளிவான புரிந்துணர்வு இருப்பதால் இருநாடுகளும் பிராந்திய அளவில் நெருங்கி செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அரசின் ஆதரவும் உதவியும் இல்லாமல் விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்திருக்க முடியாது என்று ராஜபக்ச கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post