Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஐதேக ஆதரவு – முஸ்லிம் காங்கிரசுடன் பேச முயற்சி


கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஐதேக ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.

இந்த முடிவை ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை தொலைபேசி மூலம் தன்னிடம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் 11 ஆசனங்களை வென்றுள்ள போதிலும், ஐதேகவின் 4 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாலும் ஆட்சியமைக்க முடியாது.

எனவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெறுவது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேசுவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர் என்பது திருப்தி தருகிறது.

எனினும் .திருகோணமலை மாவட்டத்தில் இன்னொரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வாய்ப்புகள் இருந்தன” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post