Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜூலியன் அசாஞ்சேவை காப்பாற்ற புதிய முயற்சி

லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை ஸ்வீடனில் உள்ள ஈக்வடார் தூதரகத்திக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் அரசிடம் அனுமதி கோருவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஈக்வடார் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரிகார்டோ படினோ தெரிவித்தார். ஸ்வீடனில் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக அவரிடம் லண்டனில் உள்ள தங்கள் தூதரகத்திலேயே விசாரணை நடத்தலாம் என்று ரிகார்டோ படினோ கூறியுள்ளார்.

அதற்கு சாத்தியமில்லை என்றால், அவரை ஸ்வீடனில் உள்ள ஈக்வடார் தூதரகத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கினால் அங்கு அவரிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் ரிகார்டோ படினோ தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்த அசாஞ்சே அங்கிருந்து வெளியே வந்தால் பிரிட்டன் காவல்துறையினர் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post