Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூகிள் குரல் வழிகாட்டி வசதி தற்போது இந்தியாவில்

கூகுள் மேப் பயன்பாட்டில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த குரல் வழிகாட்டி வசதி தற்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு வெளிநாடுகளில் ஏற்கெனவே இருந்துவரும் இந்த வசதியை இந்தியாவில் உள்ளவர்களும் இனி பயன்படுத்த முடியும்.

இதன்படி, இந்தியாவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாகனங்களில் அல்லது நடந்து செல்ல விரும்புபவர்கள், தங்களது ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி எந்த வழியில் செல்வது என்பதை அறிந்து கொள்ளலாம். வெறுமனே, இடது – வலது என்பன போன்ற தகவல்களை மட்டும் கூறாமல், அருகிலுள்ள மருத்துவமனை, ஏடிஎம், பெட்ரோல் நிலையம் போன்ற வசதிகளையும் கூகுள் மேப் தெரிவிக்கும்.

இந்த வசதியைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் ஆண்ட்ராய்டு 2.2 பதிப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் அவசியம். இது தவிர, சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களையும் உடனுக்குடன் பெற முடியும்.
[vuukle-powerbar-top]

Recent Post