Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய தேசமே, மத்திய அரசே உனக்கு வெட்கமா இல்லை? தீக்குளித்த விஜயராஜ் கடிதம்ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து சேலத்தில் தீக்குளித்த தியாகி விஜயராஜ் அவர்கள் எழுதிவைத்த 39 பக்க கடிதம் காவல்துறை கைப்பற்றியது . அந்த கடிதத்தில் விஜயராஜ் கீழ் கண்டவாறு  எழுதியுள்ளார் ..

1. காவல்துறை! நண்பர்களே சகோதர்களே! ஏன் அம்மாவை தொந்தரவு செய்யாதீர்கள் அவள் ஒரு நோயாளி மனசாட்சி படி நடங்கள்.

2. அம்மா! என்னை பற்றி கவலை படாதே நீ நல்லா சாப்பிடு உடம்பை பாத்துக்கோ சந்தோசமாக இருங்க. 

3. நான் செத்த பின்பு என் உயிருக்கும் மேலான என் தாய் பெருமாயி அவர்களை பார்த்து கொள்ளுங்கள். 

4. என் குடும்பம் சுந்தர்ராஜ் ரேவதி மயில்வாகனம் நல்லா இருங்க. 

5. என் உயிருக்கும் மேலான என் நண்பகளே நீங்கள் நல்லா இருங்க. 

6. சுந்தர்ராஜ் உன் குடும்பத்தை நல்லா பாரு மயில் வாகனத்தை நல்லா படிக்க வை. 7. அய்யோ! அம்மா நீ! அழாதே உன் உடம்பை நல்லா பாத்துக்கோ. 

8. இந்திய திரு வாட்டு நல்லுறவு நாடியவன் இதழ்வறண்டு நாவறண்டு பேச்சின்றி மூச்சின்றி ஈழத்தமிழன் சுதந்திர காற்றை சுவாசிக்க தன் சுவாசம் விட்டானே தீலிபன். 

9. இலங்கை தமிழர்கள் மீது அன்பு கொண்டவர். MGR.

10. புரட்சி தலைவர் MGR இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்திருக்குமா.? 

11. சீமான் பேசும்போது நரம்புகள் துடித்தது கண்கள் சிவந்தன ராஜபக்சேவை அழிக்க புறப்படுகிறேன். 

12. வீர வணக்கம் வீர வணக்கம் விடுதலைப் புலிகளுக்கு வீர வணக்கம் தமிழீழம் மலர பாடுபடும் அனைத்து தமிழர்களுக்கு வீர வணக்கம். 

13. பத்து தடைவை வராது பாடை பதுங்கி கிடக்கும் புலியே தமிழர் என்ற என் அண்ணன் உணர்ச்சி கவிஞர். “காசி ஆனந்தன்” சொல் கேட்குமா இன்னும் மௌனம் ஆர்த்தெழவாய் தமிழா சினத்; தெரு சீறிப்புறப்படு! உன் வீரம் சொல். 

14. தமிழின விடுதலைக்கு குரல் கொடுத்த மாமனிகளாம் குட்டிமணி, செகன் எனும் விடுதலை வித்துக்கள் தங்கதுறை எனும் தங்க மகன் முத்தான கண்மணிகளின் கண்களான பிடுங்கி கால்களால் நசுக்கிய போது சிதறிய கண்ணீர் துளிகளோ கடளில் மிதக்கிறது. 

15. ஈழத்தில் குண்டுமழை ஓயவில்லை! பச்சிளம் குழந்தைகள் உடல் சிதறி சாவதும் நிற்கவில்லை! ஈழத்தமிழச்சியின் பிணத்தையும் புணர்ந்து எக்காள்மிட்டுக் கொண்டிருக்கிறது. சிங்கள் இனவெறி ரானுவம்! 

16. போதும்! இதுவரை இழந்தது போதும் இனியும் இழக்க வேண்டாம். 

17. பிரபாகரன் தலைமையில் ஜெயலலிதா வை.கோ சீமான் இவர்கள் உன்று சேர்ந்து போராடினால் கண்டிப்பாக தமிழீழம் ஒரு நாள் மலரும். 

18. விடுதலை வேட்கை – எங்கும் தோற்றதாய் வரயாறில்லை நாளை வரைபடத்தில் தமிழீழமதத் தீ விடுக்கும் - ஆங்கே! புலிக்கொடி பறந்திருக்குமா. பெரியதோர் இன்பம் பிறக்குமாடா பற்றியெறிந்த நெஞ்சமெல்லாம் குமிருமடா ஓயுதல் திருமடா. ஆறுதல் கிடைக்குமடா., ஆறுதல் கிடைக்குமடா., தமிழா! நும் வாழ்வு ஒழீக்குமடா. 

19. இலங்கையில் தமிழர்களின் அழிவிற்கு காரணம் மத்திய அரசம் கருணாநிதி அரசம் தான் மந்திரி பதவிக்காக தழிழர்களை மறந்தவர்தான் கருணாநிதி. 

20. ஏதோ ஒன்று கிடைத்து விட்டு போகட்டும் போன கற்பு திரும்பி வருமா? கற்பென்ன கடையில் விற்கும் கடைச் சரக்கா காசுக்கு வாங்க? உன் வீட்டு பெண்ணுக்கு  இதுபோல நிகழ்ந்தால் கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பாப்பதோ! வேதனையய்யா வேதனை நீரெல்லாம் தமிழினமா? ஏனக்கேட்டும் கற்புக்கரசிகளின் கண்ணீர் துளிகளோ கடலில் மிதக்கிறது. 

21. தமிழர்களை கொன்று குவித்தவனுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பா! இந்திய தேசமே மத்திய அரசே உனக்கு வெட்கமா இல்லை! 

22. யாழ்ப்பனம் மேயராக இருந்த துரையப்பாவை தமிழர்களின் துரோகி! என்று குற்றம்சாட்டி நேருக்கு நேராக சுட்டுக் கொன்றார். தன்மான தலைவர் மேதரு பிரபாகரன் 27.07.1975. 23.

23. வை.கோ போகும் பொதுக்கூட்த்தில் நானும் கலந்து கொள்வேன் வைகோவின் பேச்சு உணர்ச்சி மிக்கதக்க இருந்தது. 

24. கும்மிருட்டு வேலையிலே நாய்களின் குரைப்புகளிடையே நிர்வாணமாய் ஒரு பெண்..இ குப்பை தொட்டிக்குள் தன் மானம்காக்க ஏதேனும் கிடைக்காதக எனக் கண்ணிரோடும் கதறலோடும் தேடுவதென்ன தெரியுமா? இல்லதிலிருக்கையில் கணவன் கண்ணெதிரில் சிங்களன் வெறிச்செயலாள் கற்பிழந்து போனவன். இவன் மானத்தினை காக்க ஒரு ஒட்டு துணி அய்யா ஒரு ஒட்டு துணி. 

25. வை.கோ அண்ணா தமிழிழம் மலரும் வரை ஓயாதீர்கள் பின் வரும் தமிழினம் உங்களை கடவுளாக கும்பிடுவார்கள். 

26. பிரபாகரன் தலைமையில் ஜெயலலிதா வை.கோ சீமான் இவர்கள் ஒன்று சேர்ந்து போராடினால் கண்டிப்பாக தமிழீழம் ஒரு நாள் மலரும். 

27. இலங்கையில் உள்ள தமிழர்கள் நம் உறவுகள் ரத்த சொந்தங்கள் அவர்களை இனியாவது காப்பாற்றுங்கள். 


28. 1958 கலவரத்தின் போது கொழும்பு நகரில் வசித்து வந்த தமிழர்களின் வீடகளை சிங்களர்கள் தாக்கினார்கள்! தீ வைத்து கொளுத்தினார்கள்! 

29. இனியும் தூங்காதே தமிழா விழித்திரு தமிழர்களை காப்பாற்று நமது தமிழ் இனம் அழிவதை தடுத்த நிறுத்து. 

30. பிரபாகரனின் தந்தை பெயர் : வேலுப்பிள்ளை, தாயர் பெயர் : பார்வதி அம்மாள் இந்த தம்பதிகளின் நான்காவது குழந்தையாக யாழப்பாணம் மருத்துவமனையில் 1954 நவம்பர் 26ம் தேதி பிரபாகரன் பிறந்தார்.

31. தமிழகத்தின் வெண்ணெய் வெட்டி வீரர்களோ பதவி மகுடம் சூட களமிறங்கி விட்டனர். ஈழத்தமிழ் இனத்தை கொள்ளாதே! அழிக்காதே! என்று துடித்தோமோ! குமிறினோம். வழக்கறிஞர்! மாணவர்கள் பெண்கள்! ஆண்கள்! இல்லாமல் வந்து ஓடினோமே. 

32. ஈழ மண்ணில் எரிவது வெறும் தேசமல்லடா தமிழா! நும் தேகமடா… அது கண்ணிடுத்தும் குருமாய் காதிருந்தும் செவிடாய் வாயிலிருந்தும் ஊமையாய் இருப்பதற்கோ நீ பிறந்தாய்? நாதியற்று பேர்வதற்கும் நடைபிணமாய் வாழ்வத்கா என ஈன்றெடுத்தேன். 

33. தமிழினம் தலை நிமிர தமிழீழம் துளித்திட தன்னுயிர் மாய்த்திட்டு விண்னேறி சென்ற விடுதலை வித்துக்கள் மாவிரர் அனைவருக்கும் தமிழ்த்தாயின் வீர வணக்கம்! 

34. இலங்கை தமிழர்களை அழிக்க ரானுவ உதவிகள் ரேடார்கள். ஆயுதங்கள் கொடுத்த மத்திய அரசே இனியாவது திருந்துங்கள் மிச்சமிருக்கும் தமிழர்களை காப்பாற்றுங்கள்…. 

35. தாய்ப்பாலோடு தமிழ்ப்பாலும் தந்துனக்கு வளர்த்தேன! எங்கேடா… உன் உணர்வு! என தமிழன்னை ஏங்கி சிந்திடும் கண்ணீர் கடலியே மிதக்கிறது! 

36. இலங்கை தமிழர்கள் உயிரில் விளையாடும் அரசியல் கட்சிகளே இனியாவது திருந்துங்கள். ஒரு இன படுகொலையை அரசியலாக்காதீர்கள்.. 

37. இவர்கள் கேடு கெட்ட பதவி ஆசைக்கு நம்முடைய தூய்மையான உணர்வுகளை பலியிடத்தான் போகிறோமா? உண்மையில் ஈழத்தழிழர்கள் இன்று பூண்டோடு அழிததற்கு தட்டி கேட்க தயாரில்லாத. தமிழனத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் தான் காரணம். 

38. இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாய் வாழ்ந்தால் தான் எங்களை போன்ற தியாகிகள் ஆத்மா சாந்தி அடையும் ஆட்டோ விஜயராஜ் 

39. ராஜபக்சே ஒழிக சிங்களன் ஒழிக தமிழன் வாழ்க. 

- ஆட்டோ விஜயராஜ்[vuukle-powerbar-top]

Recent Post