Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சேவை அனுமதிக்க வேண்டாம் ~ ம.பி முதலமைச்சருக்கு வைகோ கடிதம்

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அனுமதிக்க வேண்டாம் என்று அந்த மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் செளஹானுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்ததாக கடிதத்தில் கூறியுள்ள வைகோ, சுஷ்மா சுவராஜ் ராஜபக்சேவை சாஞ்சிக்கு விடுத்துள்ள அழைப்பு அடியாக விழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து, மதித்து, இந்தப் பிரச்னையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ,ராஜபக்சே சாஞ்சிக்கு வருவதை தவிர்ப்பீர்கள் என்றும் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் நிதின் கட்கரி, அத்வானி, யஷ்வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்டவர்களுக்கும் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே செப்டம்பர் 21ம் தேதி சாஞ்சி வருகையை கண்டித்து மதிமுக சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே வைகோ அறிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post