Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சபையில் இல்லாததற்காக எஸ்.எம்.கிருஷ்ணா மன்னிப்பு

மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, மாநிலங்களவையில் இல்லாததற்காக, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மன்னிப்பு கேட்டுள்ளார்.

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக, மாநிலங்களவையில் அதிமுக சார்பில் மைத்ரேயன், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தார்.

நேற்று பகல் 12 மணியளவில், மாநிலங்களவை கூடிய போது இந்த பிரச்னையை எடுப்பதாக இருந்தது. தீர்மானத்துக்கு பதிலளிக்க வேண்டிய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா சபையில் இல்லை. எனினும், அமளி காரணமாக சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கவனஈர்ப்பு தீர்மானத்தின் போது சபையில் இல்லாததற்காக, கிருஷ்ணா மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, மாநிலங்களவை தலைவரிடம் மைத்ரேயன் மனு கொடுத்தார்.

இதையடுத்து, சபையில் இல்லாததற்காக, மாநிலங்களவைக்கு மன்னிப்பு தெரிவிப்பதாக எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

எஸ்.எம்.கிருஷ்ணாவின் மன்னிப்பை, மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜெ.குரியன், சபைக் குறிப்பில் பதிவு செய்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post