Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாடு முழுவதும் போராட்டம் நடத்த திரிணாமூல் காங்கிரஸ் முடிவு

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் போது தீர்மானம் கொண்டுவரப்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று கட்சித் தலைவர் மமதா பானர்ஜி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சவுகதா ராய், இந்த விவகாரத்தில் நாடு தழுவிய அளவில் விவாதம் நடத்தி, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.

மேலும், மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post