Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சவின் முள்ளிவாய்க்கால் பயணத்தினால் நடுக்காட்டில் விடப்பட்ட தமிழ்மக்கள்

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று முல்லைத்தீவுக்குப் பயணம் மேற்கொண்டதால் தான், மெனிக் பாம் இடம்பெயர்ந்தோர் முகாம் அவசரஅவசரமாக மூடப்பட்டு, அங்கிருந்த மக்கள் முல்லைத்தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. 

மெனிக் பாம் முகாமில் எஞ்சியிருந்த மக்கள் நேற்று முன்தினம் அவசர அவசரமாக  இலங்கை  படையினரால் அகற்றப்பட்டு, மீள்குடியமர்வு என்ற பெயரில், வற்றாப்பளையில் இறக்கி விடப்பட்டனர். 

கேப்பாப்பிலவைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு சொந்த இடங்களில் குடியமர அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று இருப்பிட வசதிகள் ஏதும் செய்யப்படாமல் நந்திக்கடலேரியை அண்டிய காட்டுப் பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். 

இலங்கை  அதிபர் நேற்று முள்ளிவாய்க்காலுக்குச் சென்று அங்கு கூட்டம் ஒன்றிலும் உரையாற்றியுள்ளார். 

இதன்போது, முள்ளிவாய்க்கால் முன்னேற்றமான பகுதியாக மாற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை  அதிபரின் வருகைக்காகவே, மெனிக்பாம் முகாம் அவசரமாக மூடப்பட்டு, மாற்று இருப்பிட வசதிகள் ஏதும் செய்யப்பாடாமல் அங்கிருந்த மக்கள் நடுக்காட்டில் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post