Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

போராட்டங்களுக்கு மதிப்பில்லை. கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி தொடக்கம்


போராட்டங்களுக்கு  மதிப்பில்லை. கூடங்குளம் அணு உலையில் ஏறி பொருள் நிரப்பும்  பணி தொடக்கம்.    

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக பல போராட்டம் தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கூடங்குளத்தில் உள்ள ஒரு அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியை அறிவிப்பில்லாமல் தொடங்கியது இந்திய அணுசக்தி கழகம்.   

சர்வதேச அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அணு உலைகளில் எரிபொருள் நிரப்பலாம் என்று அனுமதி கொடுத்த பின் கூடங்குளத்தில் எரிபொருளை நிரப்ப தயாரானது இந்திய அணு சக்தி கழகம்  

முதல் கட்டமாக  ஒரு அணுஉலையில் எரிபொருள் நிரப்பப் படுகிறது. இந்த பணி  இன்னும் பத்து நாட்களில் நிறைவடையும்  என்று இந்திய  அணு சக்தி கழகம்    தெரிவித்துள்ளது . 

இம்முறை எரிபொருள் நிரப்பப்டுவது குறித்து மத்திய  மாநில அரசு வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும் என ஆலோசனை வழக்கப் பட்டதை அடுத்து சத்தமில்லாமல் எரிபொருள் நிரப்பும் பிணியை தொடங்கியது இந்திய அணுமின்  கழகம்  

இந்நிலையில் தூத்துக்குடி  துறைமுகத்தை மீனவர்கள் முற்றுகையிடப் போவதாக அணு உலை போராட்டக் குழு  அறிவித்துள்ளது. மீண்டும் கூடங்குளம் அணு உலையை போராட்டுக் குழு முற்றுகையிடும்  எனத் தெரிகிறது . 

[vuukle-powerbar-top]

Recent Post