Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் இணையும் விக்ரம் பிரபு மற்றும் லிங்குசாமி கூட்டணி.(படங்கள் இணைப்பு).



பழம் பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், தமிழ் சினிமாவின் வெற்றி நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவின் முதல் படமான  கும்கி தற்போது திரையரங்கை கலக்க தயாராகி வருகிறது.

வெற்றி தயாரிப்பாளர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம், ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனத்துடன் சேர்ந்து திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இதற்கிடையே, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனமானது, நடிகர் விக்ரம் பிரபுவை நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை ஆரம்பிப்பது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.

மாபெரும் வெற்றியை தந்த எங்கேயும் எப்போதும் படத்தை  இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்கவுள்ளார்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெற்றது.

முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை ருசித்த இயக்குனர் சரவணனுக்கு இது இரண்டாவது படமாகும்.இப்படத்திற்காக இசையமைக்கவுள்ளார் இசையமைப்பாளர் சத்யா.

[vuukle-powerbar-top]

Recent Post