Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மெனிக்பாம் முகாம் மூடுவிழா இன்று

வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட மெனிக் பாம் இடம்பெயர்ந்தோர் முகாம் இன்றுடன் மூடப்படுவதாக இலங்கை இராணுவத்தின் வன்னிப் படைத்தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். 

“இந்த முகாமில் தங்கியிருந்த 300,000 பேரில் இறுதிக்கட்டமாக, எஞ்சியுள்ள 361 குடும்பங்களைச் சேர்ந்த 1186 பேர் இன்று மீள்குடியமர்வுக்காக மெனிக் பாமில் இருந்து கொண்டு செல்லப்படவுள்ளனர். 

இலங்கையில் இன்று தொடக்கம் இடம்பெயர்ந்த மக்கள் எவரும் கிடையாது. 

இறுதிக்கட்டமாக மீளக்குடியமர்த்தப்படவுள்ள சிலர் தமது சொந்த இடங்களுக்கு திரும்புகின்றனர், வேறு சிலர் இலங்கை  அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் குடியமரவுள்ளனர்” என்று அவர் மேலும் கூறியுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post