Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

போதிய பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டிவரும் - உச்ச நீதிமன்றம்


கூடங்குளம் அணுஉலை தொடர்பில் இன்று உச்ச நீதிமன்றம் ஒரு பரப்பரப்பான கருத்தை தெரிவித்துள்ளது.

அதாவது கூடங்குளம் அணு மின் நிலையம் போதுமான பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புற சூழல் மாசு கட்டுப் பாடு விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் , அவ்வாறு கடைபிடிக்க தவறும் பட்சத்தில் கூடங்குளம் அணுஉலையை மூடும்படியான ஆணையை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம் இப்படியான கருத்தை சொல்லியிருப்பது இந்திய அணுஉலை கழகத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு பதில் தெரிவிக்கையில் இந்திய அணுஉலை கழகம் கூறியிருப்பதாவது, புகிஷிமா போன்ற பேரிடர் கூடங்குளத்தில் நிகழ்ந்தாலும் அங்குள்ள அணு உலைகளுக்கு எந்த பாதிப்பும் வராதவாறு தான் கூடங்குளம் அணுஉலை கட்டப்பட்டுள்ளது எனவும் அதற்கான அனைத்து அதிநவீன வசதிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


இதனால் இந்த வழக்கு வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மக்களின் பயத்தை போக்காமல் அணு உலையை திறக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் பிடிவாதமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



மேலதிக செய்திகள்..


பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார். அவர் 4 முக்கிய வாதங்களை முன் வைத்தார். கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவை நிலத்தடியில் தேக்கினால், அதனால் நிலத்தடி நீரில் கதிர்வீச்சு தாக்கம் ஏற்படும், அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கடலில் கலக்கும் போது, அதன் வெப்பத்தின் அளவு காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் ஆகியன பிராசாந்த் பூஷன் முன் வைத்த வாதங்களாகும். 

அவரது வாதங்களை கேட்ட நீதிபதிகள், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க எத்தனை கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது என்பது குறித்து கவலை இல்லை, மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்ய முடியாது. மேலும் கடலில் அணுமின்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை கலப்பதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து மத்திய சுற்றுச்சூழல்/ வனத்துறை அமைச்சகம் சார்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி வருகிற வியாழக்கிழமையன்று வாதாட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

தேவைப்பட்டால் அணுஉலையை மூடவும் உத்தரவிடப்படும் என்றும் எச்சரித்தனர். போராட்டக்குழு வரவேற்பு : 

உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்திற்கு கூடங்குள அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டினை மத்திய , மாநில அரசுகள் மதித்து நடக்க வேண்டும். 

பொதுமக்கள் மீது அக்கறை காட்டியுள்ள உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் போல் செயல்படாமல் , உச்சநீதிமன்றம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.




[vuukle-powerbar-top]

Recent Post