Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் திருகோணமலை மாவட்டம்


திருகோணமலை மாவட்டத்தில் கடும் போட்டிக்கு மத்தியில் அதிகளவு வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறை சுமார் 11 ஆயிரம் அதிகப்படியான வாக்குகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தலில் 44,396 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் 3 ஆசனங்களை வென்றுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 43,324 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் 3 ஆசனங்களை இந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சிக்கு 59,784 வாக்குகள் கிடைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 26,176 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்கு 2 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி 24,439 வாக்குகளைப் பெற்றதன் மூலம் ஒரு ஆசனத்தையும், தேசிய சுதந்திர முன்னணி 9,522 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post