Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜெயாவின் இரட்டை நிலை.அன்று அணுசக்திக்கு எதிர்ப்பு. இன்று அணுசக்திக்கு ஆதரவு. ஆதாரம் இணைப்பு


ஜெயாவின் இரட்டை நிலை.அன்று  அணுசக்திக்கு எதிர்ப்பு. இன்று அணுசக்திக்கு ஆதரவு.  ஆதாரம் இணைப்பு 

அன்று சென்னைக்கு ஆபத்து வந்த போது அவரின் அறிக்கை: கடந்த 2007 ம் வருடம் ஜூலை 1 ல் அமெரிக்க அணு சக்தி போர் கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்தில் நிறுத்த அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஒரு 500 மெகாவாட் திறனுள்ள ஒரு கப்பலே கடும் ஆபத்து நிறைந்தது எனவும், கதிர்வீச்சு மிக அதிகமாக இருக்கும் எனவும் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அவரின் முழு அறிக்கை கீழே: இது  அப்போதைய நாளேட்டில் வெளிவந்துள்ளது.  


இன்று கூடங்குளத்திற்கு ஆபத்து வந்த போது அவரின் அறிக்கை: 

2000 மெகவாட் திறனுள்ள அணுமின் உலையால் எப்படி ஆபத்து இருக்காது என சொல்கிறார். நேற்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் கூடங்குளம் அணுமின் உலை பாதிப்பு இல்லை என சொல்லி இருக்கிறார். அவரின் அறிக்கை கீழே: கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளதால், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும், அணுமின் நிலையத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய போதும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அணு உலைகளை இயக்கத்திலிருந்து நிறுத்தும் போதும், உலைகளை குளிர்விக்கத் தேவையான ஒரு டீசல் மின்னாக்கிக்கு பதில் நான்கு டீசல் மின்னாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டீசல் மின்னாக்கிகள், வெள்ளம் மற்றும் சுனாமி தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் கடல் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இந்திய விஞ்ஞானிகள், ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே, கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு தொடர்பாக பொது மக்கள், குறிப்பாக, கூடங்குளம், இடிந்தகரை, உவரி, கூட்டப்புளி, கூடுதாழை, பெருமணல், கூத்தங்குழி உள்ளிட்ட அந்தப் பகுதி கடற்கரை கிராமங்களில் யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

திட்டங்களுக்காக மக்கள் என்று இல்லாமல், மக்களுக்காகவே திட்டம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வரும் எனது தலைமையிலான அரசு, ஏழை, எளியவர்களுக்கான அரசு; சராசரி மனிதர்களுக்கான அரசு; சாமானிய மக்களுக்கான அரசு. தமிழக மக்கள் எவரும் பாதிக்கப்படாத வகையில் தான், எனது அரசு செயல்பட்டு வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். எனவே, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. 

அவரின் மேற்கண்ட அறிக்கையில் மக்களுக்காக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது  என தெளிவாக சொல்லவில்லை. வெறும் தைரியத்தை கொடுக்கும் வகையிலே அவரின் அறிக்கை அமைந்துள்ளது. 

அன்று சென்னைக்கு என்றவுடனே ஒரு சாதாரண அணு ஆயுத கப்பலே ஆபத்து என்று சொன்னவர், இன்று ஒரு பெரிய அணுஉலை ஆபத்து இல்லை என சொல்லியுள்ளார். சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? மக்களே சிந்தியுங்கள். உண்மை நிலையை அரசு உணர வேண்டும். நம் மக்கள் காக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஜெயாவின் இரட்டை நிலை அம்பலமாகியுள்ளது .

நன்றி: பிரதாப் தாஸ் 
[vuukle-powerbar-top]

Recent Post