Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தயாரிப்பாளருக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய காஜல் அகர்வால்.


 காஜல் கர்வால் மற்றும் மகேஷ் பாபு ஆகிய இருவரும் சேர்ந்து நடித்த தெலுகு படமான "பிச்னஸ்மான்" மிக பெரியளவில் வெற்றிபெற்றதை அடுத்து, இவர்கள் ஜோடி மிக பிரபலமாக பேசப்பட்டது.

இதனையடுத்து, இவர்கள் இரவரையும் இணைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க, இயக்குனர் சுகுமார் தீர்மானித்து, இருவரது சம்மதத்தையும் பெற்றிருந்தார்.இதன் காரணமாக, இயக்குனர் சுகுமார் இவர்கள் இருவரும் தோன்றும் பாடல் காட்சி ஒன்றை மிக பெரிய பொருட் செலவில்  பிரமாண்டமாக படமாக்க எத்தனித்து, சுமார் 2 கோடி ரூபாய் செலவில், 1000 நடனக் கலைஞர்களை வரவழைத்திருந்தார்.

ஆயினும், அன்றைய நாள் படப்பிடிப்பிற்கு காஜல் அகர்வால் கலந்து கொள்ளவில்லை.இதன் காரணமாக 2 கோடி ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக புலம்பி தீர்த்து விட்டார் இயக்குனர் சுகுமார்.

தற்போது காஜல் அகர்வால், நடிகர் ஆதியின் சொந்த தயாரிப்பில், அவரது அண்ணன்  சத்திய பிரகாஷ் இயக்கும் புதிய படமொன்றில்,ஆதியின் நாயகியாக நடிக்க சம்மதம் தெரிவித்து, அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாலேயே, மேற்படி தெலுகு படத்தின் பாடல் காட்சியில் அன்றைய தினம் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாக, மகேஷ் பாபு நடிக்கும் தெலுகு படத்திலிருந்து காஜல் அகர்வாலை நீக்கி விட்டதாகவும்,இவருக்கு பதிலாக மும்பையை  சேர்ந்த மாடல் அழகி ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



[vuukle-powerbar-top]

Recent Post