Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலில் தீ

இரசாயன பொருட்களை ஏற்றி இலங்கைக்கு வந்துக்கொண்டிருந்த கப்பல் ஒன்றில் மும்பை கடற்பரப்பில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த கப்பலில் நேற்றுமாலை தீ பரவ ஆரம்பித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எம்.வி. அம்ஸ்டர்டாம் பிறிட்ச் என்ற இந்த கப்பலில் 54 ஆயிரத்து 405 தொன் இரசாயன பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரசாயன பொருட்கள் விஷத்தன்மையுடன் கூடியது எனவும் அது சமுத்திரத்தில் கலந்தால் சமுத்திர வளத்திற்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த கப்பல் அன்றிகாவிலும், பாபுடாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த கப்பலில் இருந்த பணியாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பணியாளர்களை மீட்பதற்கும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் இந்திய கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

[vuukle-powerbar-top]

Recent Post